-mdl.jpg)
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது மார்ச் 29ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான பாகிஸ்தான் முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் முகமது ரிஸ்வான் தலைமையிலான இந்த அணியில் பாபர் ஆசாம், நசீம் ஷா உள்ளிட்டோருக்கும் இடம் கிடைத்துள்ளது. முன்னதாக இவர்கள் மூவரும் டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர்.
அதேசமயம் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. இந்த அணிக்கு கேப்டனாக டாம் லேதம் நியமிக்கப்பட்டார். மேற்கொண்டு இந்த அணியில் மைக்கேல் பிரேஸ்வெல், டேரில் மிட்செல், வில் யங், மார்க் சாப்மேன், வில்லியம் ஓ ரூர்க், ஜேக்கப் டஃபி ஆகியோருடன் அறிமுக வீரர்கள் நிக்கி கெல்லி மற்றும் முகமது அப்பாஸ் ஆகியோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.