
Laxman Named As India's Interim Coach In Dravid's Absence During Asia Cup (Image Source: Google)
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் விவிஎஸ் லக்ஷ்மண். இவர் கடந்த 1996 முதல் 2012 வரையில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் சிறப்பாக விளையாடிவர் . இதுவரை 134 டெஸ்ட் மற்றும் 86 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ள அவர், மொத்தம் 11,119 ரன்களை குவித்துள்ளார்.
இதையடுத்து அவர் தற்போது தேசிய கிரிக்கெட் அகாதமியின் தலைவராகவும் செயல்பட்டுவருகிறார். இந்நிலையில் அண்மையில் அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணியின் ஆக்டிங் பயிற்சியாளராக பணியாற்றி இருந்தார்.
இந்நிலையில், தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட்டுக்கு கரோனா தொற்று பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. அப்போது முதலே இந்திய அணியின் பயிற்சியாளராக லஷ்மண் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தது. தற்போது அதனை பிசிசிஐ உறுதி செய்துள்ளது.