விராட் கோலியிடமிருந்து அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும் - யாஷ் துல்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியிடம் இருந்து அதிகம் கற்றுக் கொள்ள வேண்டும் என இந்திய அணியின் இளம் வீரர் யாஷ் துல் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகளும் இணைந்து நடத்தும் 2023 ஒரு நாள் ஆசிய கோப்பை தொடரில் சீனியர் வீரர்கள் இல்லாத இந்திய ஏ அணியை இளம் வீரர் யாஷ் துல் வழிநடத்தி வருகிறார். அதன்படி ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான முதல் போட்டியில் யாஷ் துல் சதமடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இப்போட்டியில் 84 பந்துகளை எதிர்கொண்ட யாஷ் துல் 20 பவுண்டரி, ஒரு சிக்சர் என 108 ரன்களைச் சேர்த்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இந்நிலையில், ஆசிய தொடர் குறித்தான சுவாரசியமான கருத்துக்களை வெளிப்படையாக பேசிய இந்திய ஏ அணியின் கேப்டன் யாஷ் துல்.,எதிர்வரும் தொடர் குறித்து பேசியதோடு ,விராட் கோலி குறித்தும் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
Trending
இதுகுறித்து பேசிய யாஷ் துல், “நான் விராட் கோலியை இரண்டு அல்லது மூன்று முறை சந்தித்திருப்பேன். அவர் தொலைக்காட்சியில் பார்ப்பதை விட நேரில் மிகவும் வித்தியாசமானவர். எனவே நான் அவரிடம் நல்ல நட்பை ஏற்படுத்திக் கொண்டேன். அவரிடமிருந்து அதிகம் கற்றுக் கொள்ள வேண்டும் குறிப்பாக அவருடைய ஆக்ரோஷம் மற்றும் அவர் பயன்படுத்தும் யுக்தி என அனைத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும். அவரிடம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் அவரிடமிருந்து அதிகம் கற்றுக் கொள்ளலாம் என்று எண்ணினேன்” என்று தெரிவித்தார்.
பிறகு பாகிஸ்தான் அணியுடனான போட்டி குறித்து பேசிய அவர், “எங்களுக்கு இது மற்ற போட்டிகளைப் போல் மிகவும் சாதாரண போட்டியாகும். எங்கள் எந்த ஒரு நெருக்கடியும் கிடையாது. நாங்கள் ஒரு அணியாக விளையாட திட்டமிட்டுள்ளோம். முடிவு குறித்து எந்த ஒரு எண்ணம் எங்களுக்கு கிடையாது. அந்த போட்டியில் நெருக்கடி என்பது நிச்சயம் இருக்கும், ஆனால் அதை சமாளிக்கும் வழியும் இருக்கும். நாங்கள் நெருக்கடியை சந்திக்கிறோமா அல்லது ரசித்து விளையாடுகிறோமோ என்பது எங்களுடைய கையில் தான் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்
Win Big, Make Your Cricket Tales Now