டி20 தரவரிசை: முதலிடம் பிடித்து ரவி பிஷ்னோய் சாதனை; பாராட்டும் ரசிகர்கள்!
ஐசிசி டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
சமீபத்தியில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்த டி20 தொடரில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய இளம் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய் தொடர் நாயகன் விருதை கைப்பற்றி அசத்தினார்.
குறிப்பாக இந்த தொடரில் அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்ட பவர் பிளே பவுலர்கள் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் திணறிய நிலையில், பவர் பிளே ஓவர்களிலேயே அட்டாக்கில் வந்து விக்கெட்டை வீழ்த்தியவர் ரவி பிஷ்னாய். லெக் ஸ்பின்னர் என்றாலும் பெரியளவில் ஸ்பின் செய்யாமல் அதிகளவிலான கூக்ளி பந்துகளை வீசியே விக்கெட்டை வீழ்த்தி வருகிறார்.
Trending
இந்நிலையில் ஐசிசி டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் 699 புள்ளிகளை பெற்று ரவி பிஷ்னாய் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணியின் ரஷீத் கான் 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் 3ஆவது இடத்தில் ஹசரங்கா, 4ஆவது இடத்தில் ஆதில் ரஷீத் மற்றும் 5ஆவது இடத்திலும், இலங்கை அணியின் மஹீஷ் தீக்ஷனா உள்ளனர்.
Ravi Bishnoi becomes the No.1 ranked ICC T20I bowler! #INDvAUS #Australia #India #ravibishnoi #IndianCricket pic.twitter.com/QOL0X0aYDk
— CRICKETNMORE (@cricketnmore) December 6, 2023
இவர்கள் 5 பேருமே ஸ்பின்னர்கள் என்பது தான் கூடுதல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் டாப் 10இல் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர். அதேபோல் பேட்ஸ்மேன்களுக்கான டி20 தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் உள்ள நிலையில், பவுலர்களுக்கான தரவரிசையில் ரவி பிஷ்னாய் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். பும்ராவுக்கு பின் டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் ரவி பிஷ்னாய் படைத்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now