எனது இடம் இளம் வீரர்களுக்கு கிடைத்தாலும் நானும் மகிழ்ச்சியடைவேன் - மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
சில பந்துவீச்சாளர்களை குறி வைத்து முடிந்த அளவு ரன் குவித்து கொள்ள வேண்டும், அதே போன்று சில வீரர்களின் பந்துவீச்சில் கவனமாக இருக்க வேண்டும் என்பதே எனது திட்டமாக இருந்தது என ஆட்டநாயகன் விருது வென்ற மார்கஸ் ஸ்டொய்னிஸ் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் சதத்தின் மூலம, ஷிவம் தூபேவின் அதிரடியான அரைசதத்தின் மூலமும் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 108 ரன்களையும், ஷிவம் தூபே 66 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடியா லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் குயின்டன் டி காக், கேஎல் ராகுல், தேவ்தத் படிக்கல் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தாலும், மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்கஸ் ஸ்டொய்னிஸ் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்ததுடன் 124 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன்மூலம் லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Trending
மேலும் இப்போட்டியில் சதமடித்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் விருதுபெற்றபின் பேசிய ஸ்டொய்னிஸ், இந்த தொடரில் என்னைவிட மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி போட்டியை வெற்றிகரமாக முடித்து கொடுக்கும் சில தொடக்க வீரர்கள் உள்ளனர் என்பதே உண்மை. அனைத்து பந்துகளிலும் ரன் குவிக்க வேண்டும் என்பது எனது திட்டம் இல்லை.
சில பந்துவீச்சாளர்களை குறி வைத்து முடிந்த அளவு ரன் குவித்து கொள்ள வேண்டும், அதே போன்று சில வீரர்களின் பந்துவீச்சில் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல் இந்த இன்னிங்ஸில் சில ஓவர்களில் என்னால் பவுண்டரிகளை அடிக்கவே முடியவில்லை. அப்போது பூரன் சரியான நேரத்தில் சிக்சர்களை விளாசி அழுத்தத்தை குறைத்தார். போட்டியில் சில ஏற்ற இரக்கங்கள் இருந்தாலும் அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள முயற்சித்தேன்.
டி20 கிரிக்கெட் எப்போதும் சவால் நிறைந்தது. ஏனென்றால் ஸ்கோர், இம்பேக்ட் பிளேயர் விதிகள், எந்த பவுலருக்கு எதிராக ரன்கள் சேர்ப்பது என ஏராளமான திட்டமிடல் தேவைப்படுகிறது. லக்னோ அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கருடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியா அணியில் இணைந்து செயல்பட்டுள்ளோம். ஆஸ்திரேலியா அணியின் ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறேன். அதனை மீண்டும் பெறுவதற்கு வெகு தூரம் பயணிக்க வேண்டும்.
எனது இடம் இளம் வீரர்களுக்கு கிடைத்தாலும் நானும் மகிழ்ச்சியடைவேன். ஆனாலும் ஆஸ்திரேலியா அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடி பங்களிக்க வேண்டும் என்பதே விருப்பம்” என்று தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டிற்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் டாட் மர்ஃபி, லான்ஸ் மோரிஸ், மார்கஸ் ஹாரிஸ் போன்ற வீரர்கள் புதிதாக சேர்க்கப்பட்ட நிலையில், மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது,
Win Big, Make Your Cricket Tales Now