நிச்சயம் இவரை அணியில் எடுக்கவே மாட்டேன்- யூசுப் பதான்!
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் லிவிங்ஸ்டொன் ஆட்டமிழந்து சிரித்துக்கொண்டே வெளியேறிய நிகழ்வு தற்போது இணையத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
நேற்று ஐபிஎல் தொடரில் இமாச்சல் பிரதேசம் தர்மசாலாவில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி வென்றாலும் எந்தவிதமான பிளே ஆப் வாய்ப்பும் அந்த அணிக்கு இருக்கவில்லை. அதே சமயத்தில் ராஜஸ்தான் அணி வென்றால் நூல் இழையில் அந்த அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு இருக்கவே செய்தது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு இறுதி கட்டத்தில் சாம் கரன் மற்றும் ஷாருக்கான் இருவரும் அதிரடியாக விளையாட 187 ரன்கள் வந்தது. தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் அணி 19 இலக்கை எட்டி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ப்ளே ஆப் வாய்ப்பில் இன்னும் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.
Trending
இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்யும்பொழுது முதலில் பிரப்சிம்ரன் அடுத்து இளம் வீரர் அதர்வா டைடே, அதற்கு அடுத்து கேப்டன் ஷிகர் தவான் என 5.3 ஓவரில் 46 ரன்களுக்கு மூன்று விக்கட்டுகளை இழந்து விட்டது. இரண்டு விக்கெட் இழப்பின் போது களத்திற்கு வந்த லியாம் லிவிங்ஸ்டன் கொஞ்சம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை மீட்க வேண்டிய நேரத்தில், 6.3 ஓவரில் சைனி பந்துவீச்சில் தேவையில்லாத ஒரு ஷாட்டுக்கு சென்று கிளீன் போல்ட் ஆனார். அப்பொழுது அணியின் ஸ்கோர் 50.
அவர் ஆட்டம் இழந்ததை விட அடுத்து அவர் அதற்காகச் சிரித்துக் கொண்டு களத்தை விட்டு வெளியேறினார். இதை கிரிக்கெட் வர்ணனையில் இருந்து பார்த்த யூசுப் பதான் மற்றும் ஹர்பஜன்சிங் இருவரையும் எரிச்சல் அடைய வைத்தது.
Why was Liam Livingstone laughing after getting bowled by Navdeep Saini? #PBKSvsRR #PBKSvRR #IPLPlayOffs #CricketTwitterpic.twitter.com/GfpUKLscGz
— 12th Khiladi (@12th_khiladi) May 19, 2023
இதைப் பார்த்த யூசுப் பதான், “நான் பயிற்சியாளராகவோ கேப்டனாகவோ இல்லை மென்டராகவோ இருந்தால் நிச்சயம் இவரை அணியில் எடுக்கவே மாட்டேன்” என்று கடுமையாகக் கூறினார். அப்பொழுது அவருடன் இருந்த ஹர்பஜன் சிங்கும் அவரது கருத்தை ஆமோதித்தார். தற்பொழுது இவர்கள் இருவரும் இந்த கருத்திற்காக சமூக வலைதளங்களில் பெரிய பேசு பொருளாக மாறி வருகிறார்கள்.
Win Big, Make Your Cricket Tales Now