இது எனக்கு நம்பமுடியாத பெருமையான விஷயம் - லியாம் லிவிங்ஸ்டோன்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள லியாம் லிவிங்ஸ்டோன், முதல் முறையாக அணியை வழிநடத்தவுள்ளது குறித்து மனம் திறந்துள்ளார்.
இங்கிலாந்து அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. அதன்படி அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது நவம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான 14 பேர் அடங்கிய இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது.
அதன்படி காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய ஜோஸ் பட்லர் தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ளதுடன், அணியின் கேப்டனாகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. மேற்கொண்டு அறிமுக சுழற்பந்து வீச்சாளர் ஜாஃபர் சோஹனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலிய தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்தும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த ஜான் டர்னர், டேன் மௌஸ்லி ஆகியோருக்கு இத்தொடரிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
Trending
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து ஒருநாள் அணியில் இருந்து கேப்டன் ஜோஸ் பட்லர் காயம் காரணமாக விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம் டி20 அணிக்கான கேப்டனாக ஜோஸ் பட்லர் தொடர்வார் என்றும், அவருக்கு மாற்றாக அறிமுக வீரர் மைக்கேல் பெப்பர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியை லியாம் லிவிங்ஸ்டோன் வழிநடத்துவார் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக முதல் முறையாக நியமிக்கப்பட்டது குறித்து பேசியுள்ள லியாம் லிவிங்ஸ்டோன், “நீங்கள் இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட போகிறீர்கள் என்று தினமும் யாராவது உங்களிடம் செல்லமாட்டார். அதனால் இது எனக்கு நம்பமுடியாத பெருமையான விஷயம். ஒதுக்கிவைக்கப்படுவது தொழில்முறை விளையாட்டின் ஒரு பகுதியாகும், ஆனால் நாங்கள் அடுதடுத்து இரண்டு கடினமான தொடர்களில் விளையாடினோம்.
மேலும் என்னால் முடிந்தவரை விரைவாக நான் எனது ஃபார்மிற்கு திரும்பியுள்ளேன். அதேசமயம் நான் ராப் கீயுடன் அமர்ந்து, அவருடன் மிகவும் நேர்மையாக உரையாடினேன், எனக்கு இன்னொரு வாய்ப்பு வேண்டும், அதில் நான் எனது ஃபார்மை நிரூபிப்பேன் என்றேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில், நான் அதைச் செய்ததாகா நிச்சயமாக உணர்ந்தேன். மேலும் கடந்த ஆறு அல்லது 12 மாதங்களுக்கு முன்பு இருந்த ஃபார்மை விட தற்சமயம் மேம்பட்டுள்ளதாக உணர்கிறேன்.
நான் ஒரு குழந்தையைப் போல உணர்கிறேன், நான் ஒரு புதிய வாழ்க்கையின் தொடக்கத்தில் இருப்பதைப் போல இருக்கிறேன். என்னில் சிறந்தவர் இன்னும் வரப்போகிறது போல் உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக மோசமான ஃபார்ம் காரணமாக இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்த் லியாம் லிவிங்ஸ்டோன், அதன்பின் தனக்கு கிடைத்த வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்டு தனது இடத்தை உறுதிசெய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன், டி20 தொடரில் மட்டும்), ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேக்கப் பெத்தேல், ஜாஃபர் சோஹன், சாம் கரன், வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன் (ஒருநாள் அணி கேப்டன்), சாகிப் மஹ்மூத், டான் மௌஸ்லி, ஜேமி ஓவர்டன், ஆதில் ரஷித், பில் சால்ட், ரீஸ் டாப்லி, ஜான் டர்னர், மைக்கேல் பெப்பர் (ஒருநாள் அணி).
Win Big, Make Your Cricket Tales Now