
Litton Das Record: இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் ஒரு கேட்சை பிடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முஷ்ஃபிக்கூர் ரஹிமின் சாதனையை முறியடித்துள்ளார்.
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் உள்ள சிங்கள ஸ்போர்ட் கிளப் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 247 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஷாத்மான் இஸ்லாம் 46 ரன்களையும், முஷ்ஃபிகூர் ரஹிம் 35 ரன்களையும் சேர்த்தனர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா 158 ரன்களையும், தினேஷ் சண்டிமல் 93 ரன்களையும், குசால் மெண்டிஸ் 84 ரன்களையும் சேர்த்ததன் மூலம் 458 ரன்களைச் சேர்த்து அசத்தியது. இதன்மூலம் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 211 ரன்கள் முன்னிலையும் பெற்றது. இதனையடுத்து வங்கதேச அணியானது தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸைத் தொடரவுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் சிறப்பு சாதனை ஒன்றை படைத்துள்ளார்.