வங்கதேச டி20 அணி அறிவிப்பு; கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்!
யுஏஇ மற்றும் பாகிஸ்தான் தொடர்களுக்கான லிட்டன் தாஸ் தலைமையில் வங்கதேச டி20 அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச அணி சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது.
இதனையடுத்து வங்கதேச அணியானது இம்மாதம் 17ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்பின் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரானது எதிர்வரும் மே 25ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடர்களுக்கான வங்கதேச டி20 அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வங்கதேச டி20 அணியின் புதிய கேப்டனாக அனுபவ வீரர் லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் வங்கதேச அணியை திறம்பட வழிநடத்திய லிட்டன் தான் 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி அசத்தியிருந்தார். ஆனால் அதன்பின் மோசமான ஃபார்ம் காரணமாக வங்கதேச அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.
அதிலும் குறிப்பாக சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான வங்கதேச அணியில் இருந்தும் நீக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக தற்போது அணியில் இடம்பிடித்ததுடன் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு இந்த அணியில் தாவ்ஹித் ஹ்ரிடோய், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, முஸ்தாஃபிசூர் ரஹ்மான், ஷொரிஃபுல் இஸ்லாம் உள்ளிட்ட நாட்சத்திர வீரர்களும் டி20 அணிக்கு திரும்பியுள்ளனர்.
Also Read: LIVE Cricket Score
வங்கதேச டி20 அணி: லிட்டன் தாஸ் (கேப்டன்), தன்சித் ஹசன், பர்வேஸ் ஹொசைன், சௌமியா சர்க்கார், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தாவ்ஹித் ஹ்ரிடோய், ஷமிம் ஹொசைன், ஜக்கர் அலி, ரிஷாத் ஹொசைன், மஹேதி ஹசன் (துணை கேப்டன்), தன்வீர் இஸ்லாம், முஸ்தாஃபிசூர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத், தன்சிம் ஹசன் சாகிப், நஹித் ராணா மற்றும் ஷோரிபுல் இஸ்லாம்.
Win Big, Make Your Cricket Tales Now