
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 09ஆம் தேதி 09ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக வங்கதேச அணி, நெதர்லாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று சில்ஹெட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணியில் விக்ரம்ஜித் சிங் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து நட்சத்திர வீரர்கள் மேக்ஸ் ஓடவுட் 23 ரன்களிலும், தேஜா நிடமனுரு 26 ரன்களையும் சேர்த்த கையோடு விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் களமிறங்கிய வீரர்களில் டிம் பிரிங்கில் 16 ரன்களையும், ஷரிச் அஹ்மத் 15 ரன்களையும் எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்களை மட்டுமே எடுத்தது. வங்கதேச அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தஸ்கின் அஹ்மத் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.