
இந்தியாவில் நடைபெற்று வரும் லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் கிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த குஜராத் கிரேட்ஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் ஷிகர் தவான் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து வேன் வைக்கும் 10 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கிறிஸ் கெயில் - முகமது கைஃப் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
இதில் அதிரடியாக விளையாடிய கிறிஸ் கெயில் 5 பவுண்டரிகளுடன் 21 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மனன் சர்மா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த யாஷ்பால் சிங் தனது பங்கிற்கு 20 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அதேசமயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முகமது கைஃப் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.