
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா மற்றும் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஒடிசா அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியில் தொடக்க வீரர்கள் ரிச்சர்ட் லீவி ஒரு ரன்னிலும், ஜெஸ்ஸி ரைடர் 3 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கெவின் ஓ பிரையன் மற்றும் முனவீரா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், விக்கெட் இழப்பையும் தடுத்து நிறுத்தினர். இப்போட்டியில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கெவின் ஓ பிரையன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முனவீரா 33 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய யூசுப் பதான் 12 ரன்களுடன் விக்கெட்டை இழந்தாலும், மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கெவின் ஓ பிரையன் 55 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் ஒடிசா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களைச் சேர்த்தது. இந்தியா கேப்பிட்டல்ஸ் தரப்பில் இக்பால் அப்துல்லா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.