
ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் போன்றே ஓய்வை அறித்த சர்வதேச வீரர்கள் பங்கேற்கும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்திய ஆசிய லையன்ஸ் அணியை எதிர்த்து உலக ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது.
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மழை பெய்த காரணத்தால் டாஸ் நிகழ்வு தாமதமானது. அதன்பின் ஆட்டம் 10 ஓவர்களாக குறைக்கப்பட்டு டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற உலக ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆசிய லையன்ஸ் அணியில் உபுல் தரங்கா ஒரு ரன்னிலும், திசாரா பெரேரா 10 ரன்களிலும், கேப்டன் அஃப்ரிடி 2 ரன்களிலும் என அடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த தில்சன் - மிஸ்பா உல் ஹக் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.