WPL2023: மும்பை அணிக்கு பயிற்சியாளராக ஜூலன் கோஸ்வாமி, சார்லோட் எட்வர்ட்ஸ் நியமனம்!
இந்திய மகளிர் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜீலன் கோஸ்வாமி மகளிர் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸுக்கு சொந்தமான புதிய அணிக்கு ஆலோசகராகவும், பந்துவீச்சு பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு இங்கிலாந்து எதிரான தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய ஜூலன் கோஸ்வாமி, அந்த தொடருடன் ஓய்வுபெற்றார். இந்திய அணிக்காக 20 ஆண்டுகளுக்கு மேலாக விளையாடியுள்ள ஜூலன் கோஸ்வாமி, 350 க்கு மேற்பட்ட சர்வதேச விக்கெட்களை எடுத்துள்ளார். மகளிர் ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியர் என்ற பெருமையையும், மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையையும் படைத்துள்ளார்.
இந்நிலையில் இந்தாண்டு முதல் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடர் வரும் மார்ச் 4ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன. இந்நிலையில், இத்தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு சொந்தமான அணியின் ஆலோசகராகவும், பந்துவீச்சு பயிற்சியாளராகவும் முன்னாள் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
Trending
அதேபோல், இங்கிலாந்து மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் சார்லோட் எட்வர்ட்ஸ் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் தேவிகா பால்ஷிகர் பேட்டிங் பயிற்சியாளராகவும், துருப்தி சந்த்கட்கர் பட்டாச்சார்யா அணியின் மேலாளராகவும் செயல்பட இருக்கின்றன.
மகளிர் ஐபிஎல்-லில் 5 அணிகள் மட்டுமே பங்கேற்கும் நிலையில் லீக் மற்றும் பிளேஆஃப் சுற்றுகள் மட்டுமே நடைபெற இருக்கிறது. லீக் சுற்றின் முடிவில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும். முதலிடத்தில் உள்ள அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்லும். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டரை விளையாடுகின்றன. அதில், வெற்றிபெறும் அணி முதலில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற அணியுடன் இறுதிப்போட்டியில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now