
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் அடுத்த பதிப்பானது எதிர்வரும் 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் நடைபெறும் போட்டிகளுக்கான மைதானங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது.
அதன்படி மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி தொடங்கும் நிலையில், இத்தொடரின் இறுதிப்போட்டியானது ஜூலை 5ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இத்தொடரின் இறுதிப்போட்டியானது லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்பதையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
இதுதவிர்த்து ட்ராஃபோர்ட், ஹெட்டிங்லே, எட்ஜ்பாஸ்டன், தி ஓவல், ஹாம்ப்ஷையர் பவுல் மற்றும் பிரிஸ்டல் கவுன்டி உள்பட மொத்தம் 7 மைதானங்களில் இத்தொடரின் அனைத்து போட்டிகளும் நடைபெறும் என்பதையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உறுதிபடுத்தியுள்ளது. மேற்கொண்டு இத்தொடரானது இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்ட நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. அதன்படி குரூப் ஏ மற்றும் பி என இரு பிரிவுகளிலும் தலா 6 அணிகள் இடம்பிடிக்கவுள்ளன.