
'Loving this already': Harmanpreet on donning India Test jersey (Image Source: Google)
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணி வரும் ஜூன் 2ஆம் தேதி ஆடவர் அணியுடன் இணைந்து இங்கிலாந்து பயணிக்கவுள்ளது.
மேலும் இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கவுள்ளதால் இத்தொடர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், டெஸ்ட் போட்டிக்கான ஜெர்சியை அணிந்திருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அப்பதிவில் “இதனை ஏற்கெனவே விரும்ப ஆரம்பித்துவிட்டேன்” என்றும் பதிவிட்டுள்ளார்.