
இலங்கையின் டி20 லீக் தொடரான லங்கா பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் கண்டி ஃபால்கன்ஸ் - தம்புலா ஆரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கண்டி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிஷங்கா - அண்ட்ரே ஃபிளெட்சர் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். இதில் பதும் நிஷங்கா 26 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரே ஃபிளெட்சர் 44 ரன்களில் ஆட்டமிழந்து வாய்ப்பை தவறவிட்டார்.
பின்னர் ஜோடி சேர்ந்த கமிந்து மெண்டிஸ் - அஷேன் பண்டார இணையும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இதில் கமிந்து மெண்டிஸ் அரைசதம் கடந்த கையோடு 58 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அஷேன் பண்டாரா 42 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.