Advertisement

எல்பிஎல் 2023: கண்டிக்கு 158 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கொழும்பு!

கண்டி அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan July 31, 2023 • 21:20 PM
எல்பிஎல் 2023: கண்டிக்கு 158 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கொழும்பு!
எல்பிஎல் 2023: கண்டிக்கு 158 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கொழும்பு! (Image Source: Google)
Advertisement

இலங்கையில் நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4ஆவது சீசன் கலைகட்ட தொடங்கியுள்ளது. இதில் இன்று நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் - பிலௌவ் கண்டி அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கொழும்பு அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர் நிரோஷன் டிக்வெல்லா 4 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பதும் நிஷங்காவும் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் இணைந்த பாபர் ஆசாம் - ஃபெர்னாண்டோ இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் ஆசம் அரைசதம் கடந்தார். 

Trending


இதற்கிடையில் ஃபெர்னாண்டோ 28 ரன்களிலும், பாபர் ஆசாம் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 59 ரன்களிலும் ஆட்டமிழக்க, அதன்பின் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை மட்டுமே எடுத்தது. கண்டி அணி தரப்பில் இசுரு உதானா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement