
லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் - தம்புலா ஆரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ர ஜாஃப்னா அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி காளமிறங்கிய அந்த அணிக்கு சரித் அசலங்கா - ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குர்பாஸ் 14 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய தாஹித் ஹிரிடோய் 24 ரன்களுக்கும், பிரியமால் பெரேரா 5 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் தொடக்க வீரராக களமிறங்கிய சரித் அசலங்கா அரைசதம் கடந்தார்.
பின் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 56 ரன்களை எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் திசாரா பெரேரா 6, ஹர்டுஸ் 4 ரன்கள் என விக்கெட்டை இழந்தனர். அதனைத்தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மில்லரும் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை எடுத்தது.