
இலங்கையில் நடைபெற்றுவரும் 5ஆவது சீசன் லங்கா பிரீமியர் லீக் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் கலே மார்வெல்ஸ் மற்றும் கண்டி ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கண்டி ஃபால்கன்ஸ் அணிக்கு ஆண்ட்ரே பிளெட்சர் - தினேஷ் சண்டிமல் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் சண்டிமல் 32 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய முகமது ஹாரிஸ், கமிந்து மெண்டிஸ் மற்றும் மேத்யூஸ் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்ட்ரே ஃபிளெட்சர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த கையோடு 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 69 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ரமேஷ் மெண்டிஸ் 28 ரன்களைச் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சோபிக்க தவற, 20 ஓவர்கள் முடிவில் கண்டி ஃபால்கன்ஸ் அணியானது 9 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கலே மார்வெல்ஸ் அணிக்கு கேப்டன் நிரோஷன் டிக்வெல்லா - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் அலெக்ஸ் ஹேல்ஸ் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், கேப்டன் நிரோஷன் டிக்வெல்லா 25 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டிம் செய்ஃபெர்ட்டும் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.