
இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரின் 5ஆவது சீசன் விறுவிறுப்பான காட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் கண்டி ஃபால்கன்ஸ் மற்றும் ஜாஃப்கா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கண்டி ஃபால்கன்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, பேட்டிங் செய்ய களமிறங்கிய ஜாஃப்னா அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தன. இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய குசால் மெண்டிஸ் 26 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய ரைலீ ரூஸோவும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில், 18 பந்துகளில் பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 41 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார். இருப்பினும் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பதும் நிஷங்கா சதமடித்து அசத்தியதுடன், 16 பவுண்டரி 4 சிக்ஸர்கள் என 119 ரன்களை குவித்தார். இதன்மூலம் ஜாஃப்கான் கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்தாலும் 224 ரன்களைக் குவித்தது. ஃபால்கன்ஸ் அணி தரப்பில் தசுன் ஷனகா 3 விக்கெட்டுகளையும், சமீரா, மெண்டிஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கண்டி ஃபால்கன்ஸ் அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாப் ஆர்டர் வீரர்கள் ஆண்ட்ரே ஃபிளெட்சர் 13 ரன்களுக்கும், முகமது ஹாரிஸ் 25 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றினர். அதன்பின் தினேஷ் சண்டிமாலுடன் இணைந்த கமிந்து மெண்டிஸ் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் தொடக்க வீரராக களமிறங்கிய தினேஷ் சண்டிமல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின்னர் 37 பந்துகளில் 8 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 89 ரன்களை குவித்த நிலையில் சண்டிமல் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.