ஐபிஎல் 2024: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் ஷிவம் மாவி!
நடப்பு ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட ஷிவம் மாவி காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதல் போட்டியில் தோல்வியைச் சந்தித்தாலும், அடுத்த போட்டிகளில் அபார வெற்றியையைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இதையடுத்து அந்த அணி அடுத்ததாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடவுள்ளது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மாவி, காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதனை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இன்று அறிவித்துள்ளது.
Trending
இதுகுறித்து அந்த அணி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து ஷிவம் மாவி துரதிர்ஷ்டவசமாக காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். திறமையான வலது கை வேகப்பந்து வீச்சாளர் டிசம்பரில் ஏலத்திற்குப் பிறகு எங்களுடன் இணைந்ததுடன், சீசனுக்கு முந்தைய முகாமின் ஒரு பகுதியாக இருந்தார். அவர் இந்த சீசனில் அணியின் முக்கிய அங்கமாக இருந்து வருகிறார்.
ஆனால் அவர் தற்போது காயம் காரணமாக இந்த சீசனிலிருந்து விலகியுள்ளது எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. ஷிவம் தூபேவின் இந்த முடிவிற்கு நாங்கள் எங்களது முழு ஆதரவையும் அளிக்கிறோம். மேலும் அவர் தனது காயத்திலிருந்து மீள எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய உறுதிகொண்டுள்ளோம். அவர் விரைவாக திரும்ப வேண்டும். மீண்டும் அவர் முழு உடற்தகுதியுடன் திரும்புவார் என்பதில் உறுதியாக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.
கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய ஷிவம் மாவியை, இந்த சீசனுக்கு முன்னதான மினி ஏலத்தில் ரூ.6.4 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலம் எடுத்திருந்தது. இதுவரை ஐபிஎல் தொடரில் 32 போட்டிகளில் விளையாடியுள்ள ஷிவம் மாவி, 30 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளா என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now