Advertisement

ஐபிஎல் 2022: ராகுல், ஸ்டோய்னிஸுக்கு அபராதம்!

ஐபிஎல் போட்டியில் விதிமுறையை மீறியதற்காக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கே.எல் ராகுலுக்கு 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan April 20, 2022 • 13:34 PM
Lucknow Super Giants skipper KL Rahul and Marcus Stoinis, both break Code of Conduct
Lucknow Super Giants skipper KL Rahul and Marcus Stoinis, both break Code of Conduct (Image Source: Google)
Advertisement

நவி மும்பையில் நேற்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. டு பிளெஸ்சிஸ் 96 ரன்கள் எடுத்தார். 

அதன்பிறகு பேட்டிங் செய்த லக்னெள அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வெற்றி பெற்ற ஆர்சிபி புள்ளிகள் பட்டியலில் 2ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Trending


இந்நிலையில் இந்த ஆட்டத்தில் கே.எல். ராகுல், ஸ்டாய்னிஸ் ஆகிய இருவரும் ஐபிஎல் விதிமுறையை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கே.எல். ராகுலுக்கு போட்டி கட்டணத்திலிருந்து 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஸ்டாய்னிஸுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நேற்று ஹேசில்வுட் பந்தில் போல்ட் ஆன ஸ்டாய்னிஸ், கோபத்தில் நடுவர் பக்கம் திரும்பி கோபத்துடன் பேசியபடி ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். இதன் காரணமாக அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement