
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடர் முடிவுற்றவுடன் நேரடியாக மார்ச் 31ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளது. பல்வேறு அணிகள் இதற்கான ஆயத்த பணிகளில் இறங்கிவிட்டனர். இந்திய அணியில் இல்லாத வீரர்கள் ஐபிஎல் அணிகளுக்கு சென்று பயிற்சியிலும் இறங்கிவிட்டனர்.
இன்று, லக்னோவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் புதிய ஜெர்சியை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டார். இந்த நிகழ்வில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர் கௌதம் கம்பீர், கேப்டன் கேஎல் ராகுல் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் பேசிய கௌதம் கம்பீர், “லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு கேஎல் ராகுல் கேப்டனாக கிடைத்தது அதிர்ஷ்டம். அவரது பேட்டிங் அணுகுமுறை மற்றும் நேர்த்தியான கேப்டன்ஷிப் பொறுப்பு எனக்கும் இருக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. நான் கேப்டனாக இருந்த போது அவ்வாறு எனக்கு இருந்திருந்தால் சிறப்பாக செயல்பட்டிருக்க முடியும் என நினைத்திருக்கிறேன்.