
Lungi Ngidi Record: நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் லுங்கி இங்கிடி ஒரு விக்கெட்டை கைப்பற்றும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் எனும் பெருமையைப் பெறுவார்.
தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இதில் தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே முதல் டி20 போட்டியில் வெற்றிபெற்ற கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. மறுபக்கம் மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி சிறப்பான ஃபார்முடன் இந்த தொடரை எதிர்கொள்ளவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.