TNPL 2023: திருப்பூர் தமிழன்ஸை பந்தாடியது லைகா கோவை கிங்ஸ்!
திருப்பூர் தமிழன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் நடப்பாண்டு சீசன் கோலாகமலாக இன்று தொடங்கியது. தொடரின் முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கோவை அணிக்கு சச்சின் - சுரேஷ் குமார் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய சுரேஷ் குமார் 11 ரன்களிலும், சச்சின் 2 ரன்களிலும், ராம் அரவிந்த் ரன்கள் ஏதுமின்றியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த சாய் சுதர்சன் - முகிலேஷ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
Trending
நடப்பாண்டு அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் அதே ஃபார்முடன் இப்போட்டியிலும் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் முகிலேஷ 33 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அதீக் உர் ரஹ்மான் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ஷாருக் கான் 25 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இருப்பினும் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் 45 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 85 ரன்களை எடுத்த நிலையில் கடைசிப் பந்தில் விக்கெட்டை இழந்தார். இதன்மூல 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களைச் சேர்த்து. திருப்பூர் அணி தரப்பில் விஜய் சங்கர் 3 விக்கெட்டுகளையும், சாய் சுதர்சன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய திருப்பூர் அணியில் சதுர்வேத் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த துஷார் ரஹேஜா - விஷால் வைத்யா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் விஷால் வைத்யா 16 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய விஜய் சங்கர் 2 ரன்களிலும், சாய் கிஷோர, கனேஷ், பாலச்சந்தர் அனிருத் 3 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த துஷார் ரஹேஜா 33 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க அணியின் தோல்வியும் உறுதியானது.
இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கோவை கிங்ஸ் அணி தரப்பில் ஷாருக் கான் 3 விக்கெட்டுகளையும், முகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் லைகா கோவை கிங்ஸ் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியது.
Win Big, Make Your Cricket Tales Now