
Made me jump out of my seat: Kohli as Dhoni's cameo takes CSK to IPL 2021 final (Image Source: Google)
ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நேற்று தொடங்கின. முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 172 ரன்கள் சேர்த்தது.
அதன்பின் இலக்கை துரத்திய சிஎஸ்கே அணிக்கு, இறுதியில் 11 பந்துகளில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய தோனி 1 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 6 பந்துகளில் 18 ரன்கள் விளாசி சென்னையின் வெற்றியை உறுதி செய்தார்.
இதையடுத்து 9ஆவது முறையாக சென்னை அணியை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ள கேப்டன் தோனி சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.