
South Africa Squad: இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டேவிட் மில்லர், கேசவ் மஹாராஜ் மற்றும் மார்கோ ஜான்சன் ஆகியோர் மீண்டும் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதலிரண்டு போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 24ஆம் தேதி மெக்கேயில் நடைபெறவுள்ளது.
இதில் ஏற்கெனவே தென் ஆப்பிரிக்க அணி தொடரை வென்றுள்ளதால், இப்போட்டியிலும் வெற்றி பெற்று ஆஸியை ஒயிட் வாஷ் செய்ய முயற்சிக்கும். அதேசமயம், ஆஸ்திரேலிய அணி இதில் வெற்றி பெற்று ஆறுதலை தேட முயற்சிக்கும். இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதனைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.