
இந்திய கிரிக்கெட்டில் பெரிய நட்சத்திரமாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா, காயம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பிரத்வி ஷாவுக்கும் போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை. தனது திறமையை பல முறை நிரூபித்தும் டி20 உலககோப்பை அணியில் பிரித்வி ஷா சேர்க்கப்படவில்லை.
தனது உடல் தகுதியை மேம்படுத்துவதற்காக 7 கிலோ வரை உடை எடையை பிரித்வி ஷா குறைத்தார். இந்த நிலையில் சையத் முஷ்டாக் அலி தொடரில் பிரித்வி ஷா தனது திறமையை மீண்டும் நிரூபித்து இருக்கிறார். முதல் போட்டியில் 34 பந்தில் 55 ரன்கள், 2வது டி20 போட்டியில் 12 பந்தில் 29 ரன்கள் என்ற விளாசிய பிரித்வி ஷா, தற்போது டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.
அதன்படி ராஜ்காட்டில் நடைபெற்ற போட்டியில் மும்பை - அசாம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் ட்டாஸ் வென்ற அசாம் அணி முதலில் பந்துவீசியது. இதனையடுத்து பிரித்வி ஷா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார். 6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் விளாசிய அவர் 19 பந்துகளில் அரைசதம் கடந்தார்.