-mdl.jpg)
டி20 உலகக் கோப்பை 2022 தொடரின் அரையிறுதியில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி பந்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, அதன்பிறகு தென் ஆப்பிரிக்காவிடம் மட்டும்தான் தோற்றது.
அணியின் மிடில் வரிசையில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டதால்தான், இப்படி வெற்றிகளை குவிக்க முடிந்தது. அஸ்வின், அக்சர் படேல் ஆகியோர் தொடர்ந்து ரன்களை வாரி வழங்கி வந்தார்கள். அதேவேளையில் வேகப்பந்து வீச்சாளர்கள் அவ்வபோது சிறப்பாக பந்துவீசி நெருக்கடிகளை ஏற்படுத்தினர். இருப்பினும், தொடக்க வீரர்களின் செயல்பாடுதான் பிரச்சினையாக இருந்து வந்தது.
டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில், பவர் பிளேவில் இந்தியா சராசரியாக 6 ரன்களை மட்டுமே அடித்தது. இதற்கு காரணம் ஓபனர்கள் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர்தான். ஃபார்ம் அவுட்டில் இருந்த ராகுல், அதிக ரன்களை குவிக்க வேண்டும் என்பதற்காக தொடக்கத்தில் நிதானமாக விளையாட முற்பட்டு ஆட்டமிழந்தார். ரோஹித்தும் இதே மனநிலையில் விளையாடியதாகத்தான் தெரிகிறது. அரையிறுதியிலும் இதையேதான் செய்தார்கள். தோல்விக்கு இதுவும் மிக முக்கிய காரணம்.