
உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தவர் மந்தீப்சிங். இவரது தலைமையிலான பஞ்சாப் அணியானது கடந்த 2013/14 ஆம் ஆண்டிற்கான சயீத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தங்களது முதல் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் பஞ்சாப் அணிக்காக கடந்த 2010ஆம் ஆண்டு முதல் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்த மந்தீப் சிங் தற்சமயம் அந்த அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதனடிப்படையில் எதிர்வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் திரிபுரா அணிக்காக இனி விளையாடவுள்ளதாக மந்தீப் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய மந்தீப் சிங், “2023-2024 ஆம் ஆண்டுக்கான சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரை ஒரு கேப்டனாக வென்ற அதேவேளையில், ஜூனியர் மட்டத்திலிருந்து மூத்த நிலை வரை பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தில் நான் மிக அற்புதமான பயணத்தை பெற்றுள்ளேன்.
மேற்கொண்டு எனக்கு பல ஆண்டுகளாக ஆதரவளித்த பிசிஏவின் செயலர் தில்ஷர் கண்ணா, முன்னாள் வீரர்கள் யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமின்றி பிசிஏ நிர்வாகத்தின் உறுப்பினர்களுக்கும், பல ஆண்டுகளாக எனக்கு பக்கபலமாக இருந்த ஊழியர்களுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். அதேசமயம் பல யோசனைகளுக்குப் பிறகு, எனது வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறக்கும் நேரம் இது என்று நினைக்கிறேன்.