Advertisement

இது தான் மற்றவர்களை விட தொனியை முன்னிலைப்படுத்துகிறது - மார்கஸ் ஸ்டொய்னிஸ்!

ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டொய்னிஸ், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனியிடம் கேட்டறிந்த ஆலோசனை குறித்து பகிர்ந்துள்ளார்.

Advertisement
இது தான் மற்றவர்களை விட தொனியை முன்னிலைப்படுத்துகிறது - மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
இது தான் மற்றவர்களை விட தொனியை முன்னிலைப்படுத்துகிறது - மார்கஸ் ஸ்டொய்னிஸ்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 06, 2024 • 11:09 PM

உலகின் சிறந்த கேப்டனாக இந்திய அணியின் முன்னாள் வீரர் எம்எஸ் தோனி கருதப்படுகிறார். இதை அவர்களின் புள்ளி விவரத்தை வைத்தே நாம் சொல்லிவிடலாம். ஏனெனில் கடந்த 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை என அவரது தலைமையில் இந்திய அணி மூன்று ஐசிசி கோப்பைகளை வென்று சாதித்துள்ளது. இது தவிர, அவர் தனது சிறந்த விக்கெட் கீப்பிங் திறமைக்காகவும் சர்வதேச கிரிக்கெட்டில் போற்றப்படும் ஒருவராக இருக்கிறார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
February 06, 2024 • 11:09 PM

இதனால் உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் வீரர்களும் அவரைச் சந்திக்க ஆர்வமாக உள்ளனர். மேலும் அவரிடமிருந்து தங்கள் கிரிக்கெட் திறமையை மேம்படுத்திக் கொள்ள தொடர்ந்து ஆலோசனைகளைப் பெற்று வருகிறார்கள். தற்போது இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டொய்னிஸும் இணைந்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக ஸ்டோய்னிஸ் தற்போது விளையாடி வருகிறார். 

Trending

இந்நிலையில் தோனி குறித்து பேசிய அவர், “எம்எஸ் தோனி என்னிடம் ஒரு விஷயத்தை கூறினார். அதாவது பெரிய போட்டிகளில் எல்லோரும் நான் ஏதாவது கூடுதலாக செய்ய வேண்டும், வேறு ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்போது நான் தனக்குத்தானே பேசிக்கொண்டு அங்கேயே இருப்பதுடன், எனது நிலைப்பாட்டில் எப்போதும் மாறாமல் இருப்பேன். மற்றவர்கள் தங்களை மாற்றிக்கொண்டாலும், நான் என்னை மாற்றிக்கொள்ளாமல் என்னுடையை நிலைப்பாட்டிலேயே இருக்கிறேன் என்று கூறினார். அதுதான் மற்றவர்களை விட அவரை முன்னிலைப்படுத்துகிறது” என்று ஸ்டொய்னிஸ் கூறியுள்ளார்.

 

தற்போது டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடிவரும் மார்கஸ் ஸ்டொய்னிஸ், அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கெதிரான ஆஸ்திரேலிய டி20 அணியிலும் தனது இடத்தை உறுதிசெய்துள்ளார். இதன்மூலம் அவர் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலும் இடம்பிடிப்பார் என்பது உறுதியாகியுள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement