இப்படியான பிளாட் விக்கெட்டில் பந்து வீச யாருமே விரும்ப மாட்டார்கள் - மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருது வென்றது குறித்து லக்னோ அணியின் மார்கஸ் ஸ்டொய்னிஸ் மனம் திறந்துள்ளார்.
ஐபிஎல் 16 வது சீசனில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மோதிக்கொண்ட போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு 5 வெற்றிகள் உடன் முன்னேறி இருக்கிறது. இப்போட்டியில் டாசை தோற்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ மணிக்கு ஸ்டாய்னிஸ் நான்காவது வீரராக வந்து 40 பந்துகளில் ஆறு பவுண்டரி ஐந்து சிக்ஸர்கள் உடன் 72 ரன்கள் குவித்தார். இவர் நடுவரிசையில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் லக்னோ அணி 257 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணியால் அனைத்து விக்கட்டுகளையும் 19.5 ஓவரில் இழந்து 201 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. எட்டாவது ஆட்டத்தில் விளையாடிய பஞ்சாப் அணிக்கு இது நான்காவது தோல்வி ஆகும். இந்த ஆட்டத்தில் 40 பந்துகளில் 70 ரன்கள் குவித்த ஸ்டாய்னிஸ் முதல் ஓவரையும் வீசி பஞ்சாப் அணியின் கேப்டன் ஃஷிகர் தவான் விக்கெட்டையும் பறித்தார். இவரே ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Trending
ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டொய்னிஸ் பேசுகையில், “விரலில் அடிபட்டது சரி ஆகிவிட்டது. எங்களது ஹோம் கிரவுண்ட் விக்கட்டுக்கும், இந்த அழகான விக்கட்டுக்கும் இடையில் இருக்கின்ற வித்தியாசத்தை பற்றி பேசி நாங்கள் கேலி செய்து கொண்டு இருந்தோம். பதோனியும் நானும் சேர்ந்து ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முயற்சி செய்தோம். அவர் சில நல்ல ஷாட்களை அடித்தார். அவர் திறமையான வீரர். நாங்கள் இதைக் கட்டி எழுப்ப மட்டுமே முயற்சி செய்கிறோம் எங்களது கவனம் இதில்தான் இருக்கிறது.
எங்களது ஹோம் கிரவுண்ட் ஆட்டத்தில் பேட்டிங்கில் கொஞ்சம் கீழே வந்து பொறுப்பு எடுத்துக்கொண்டு ஆடுவது எனது பொறுப்பு. எந்த இடத்தில் பேட்டிங் செய்வது என்றாலும் அது எனது பயணத்தின் ஒரு பகுதி. முதல் ஓவரோ கடைசி ஓவரோ நான் எனது அணிக்கு எதையும் செய்ய தயாராக இருக்கிறேன். இதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.ஹோம் விக்கெட் பந்து வீசுவதற்கு நல்ல வேகத்தை கொடுத்து ஆக்கப்பூர்வமாக இருக்கிறது. ஆனால் இப்படியான பிளாட் விக்கெட்டில் பந்து வீச யாருமே விரும்ப மாட்டார்கள்” என்று கூறி இருக்கிறார்.
Win Big, Make Your Cricket Tales Now