
ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் 5 முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரை வென்ற அணியான ஆஸ்திரேலிய அணியின் தற்போதை செயல்பாடு பலருக்கும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. தொடக்கத்தில் அனுபவம் வாய்ந்த இடது கை பேட்ஸ்மேன் டேவிட் வார்னர். மூன்றாவது இடத்தில் தற்காலத்தின் தலைசிறந்த மாஸ்டர் பேட்ஸ்மேன் ஸ்மித். நான்காவது இடத்தில் அவரின் ஜெராக்ஸ் லபுஷாக்னே. இதற்கு கீழே அட்டாக்கிங் கிரிக்கெட் விளையாட இறுதியில் அதிரடி பேட்ஸ்மேன்கள்.
மேலும் நான்கு பேட்டிங் ஆல்ரவுண்டர்கள். உலகின் தலைசிறந்த வேகம் மற்றும் சுழற் பந்துவீச்சாளர்கள், உலகின் மிகச் சிறந்த பீல்டிங் அணி என்று இப்படி எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட முடியாத ஒரு அணியாகவே ஆஸ்திரேலியா இருக்கிறது. ஆனால் நடப்பு உலக கோப்பையில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக ஆஸ்திரேலிய வெளிப்படுத்திய ஆட்டம் அவர்களின் இயல்பான ஆட்டமாகவே இல்லை. அவர்களிடம் இருக்கும் ஒரு போர்க்குணம் வெளிப்படவில்லை. அவர்கள் தற்காப்பாகவே எல்லா நேரத்திலும் இருந்தார்கள்.
இந்த இரண்டு போட்டியிலும் அவர்கள் 200 ரண்களை தொடவில்லை. மேலும் அவர்கள் முக்கியமான நேரத்தில் சரியான விக்கெட்டுகளை கைப்பற்றவில்லை. களத்தில் அவர்களது நம்பிக்கை மிகவும் குறைவாக காணப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர், “நேற்று இரவு அவர்கள் வென்றே இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் அவர்கள் இரண்டு போட்டிகளிலும் 199 மற்றும் 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனார்கள்.