Advertisement

பாபர் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் - ஷான் மசூத்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருப்பதற்கான அனைத்து தரமும் பாபர் ஆசாமிடம் உள்ளதாக பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் தெரிவித்துள்ளார்.

Advertisement
பாபர் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் - ஷான் மசூத்!
பாபர் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் - ஷான் மசூத்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 02, 2024 • 12:50 PM

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்தடுத்த போட்டிகளில் பாகிஸ்தான் அணியானது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
November 02, 2024 • 12:50 PM

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றவது டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து நட்சத்திர வீரர்களான பாபர் ஆசாம் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, சர்ஃப்ராஸ் அகமது உள்ளிட்ட வீரர்கள் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். அதேசமயம் அவர்களுக்கு மாற்றாக காம்ரன் குலாம், சஜித் கான், நோமன் அலி ஆகியோருக்கு இப்போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டது. 

Trending

மூவரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பினை சிறப்பாக பயன்படுத்தி அணியின் வெற்றியிலும் பங்காற்றினர். இதில் காம்ரன் குலாம் சதமடித்தும், நோமன் அலி 20 விக்கெட்டுகளையும், சஜித் கான் 19 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். அதேசமயம் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனோ பாபர் ஆசாம் தொடர்ச்சியாக சொதப்பியதன் கரணமாகவே அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்ற தகவல்களும் வெளியாகி வந்தன.

இந்நிலையில் பாபர் ஆசாமிற்கு ஆதரவாக பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டன் ஷான் மசூத் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியா அவர், “பாபர் ஆசாம் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என்று நான் நினைக்கிறேன். அவருக்கு எதிர்காலம் இல்லை என்று சொல்ல நான் யாரும் இல்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருப்பதற்கான அனைத்து தரமும் அவரிடம் உள்ளது. அவர் எப்போதும் தரவரிசையில் இருப்பார்.

சில நேரங்களில், வீரர்களுக்கு ஓய்வு என்பது தேவை. இந்த இடைவேளை அவருக்கு ஒரு பெரிய நன்மையை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன், மேலும் அவர் ஒரு வலுவான வீரராக மீண்டும் வருவார். சில நேரங்களில் அணியில் இருந்து வெளியேறி ஓய்வெடுப்பத்லில் எந்த தவறும் இல்லை. அவர் நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளார் மற்றும் நிறைய கடந்துவிட்டார், மேலும் அவர் எப்போதும் பாகிஸ்தானுக்காக விளையாடும் முக்கிய பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

Also Read: Funding To Save Test Cricket

இந்நிலையில் பாகிஸ்தான் அணியானது அடுத்ததாக ஆஸ்திரேலிய மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசாம் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அதேசமயம் ஜிம்பாப்வே தொடரில் அவருக்கு மீண்டும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement