
ஆஸ்திரேலிய அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று வரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்தது. அதன்படி இந்திய நேரப்படி 7மணிக்கு தொடங்க இருந்த நிலையில், மழை காரணமாக இப்போட்டியின் டாஸ் நிகழ்வானது தாமதமானது. அதன்பின் தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் இப்போட்டியானது டாஸ் வீசப்படாமலேயே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இவ்விரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து தொடரை சமன்செய்த காரணத்தினால், இத்தொடரின் வெற்றியாளருக்கான கோப்பையை இரு அணிகளும் பகிர்ந்து கொண்டன. இதனையடுத்து இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது, எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.