
Mathew Wade To Captain Australia For The Bangladesh T20Is (Image Source: Google)
ஆஸ்திரேலிய அணி, வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை தக்காவில் நடைபெறுகிறது.
முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டி20 தொடரின் போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் காயமடைந்தார். இதையடுத்து அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால், வெஸ்ட் இண்டீஸ், வங்கதேச அணிகளுடனான தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான ஒருநாள் தொடருக்கு அலெக்ஸ் கேரி கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், வங்கதேச அணிக்கெதிரான தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தில் எழுந்திருந்தது.