
நியூசிலாந்து அணி சமீபத்தில் வங்கதேச அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடியது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து நியூசிலாந்து அணி அடுத்ததாக பாகிஸ்தான் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி தொடங்கும் இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நியூசிலாந்து அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஐபிஎல் 2023 சீசனில் அதாவது சரியான 9 மாதங்களுக்கு முன்பு கேன் வில்லியம்சனுக்கு முழங்காளில் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு நீண்ட காலம் அவர் கிரிக்கெட்டில் இருந்து விலகி ஓய்வில் இருந்தார். 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியில் உள்ளேயும் வெளியேயும் விளையாடி கொண்டு இருந்தார். இதற்கு பிறகு, வங்கதேச சுற்றுப்பயணத்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருந்தார்.