
Matthew Hayden Best Test XIs of 21St Century: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை உள்ளடக்கி 21ஆம் நூற்றாண்டின் ஆல் டைம் சிறந்த டெஸ்ட் லெவனை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தேர்ந்தெடுத்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் மேத்யூ ஹைடன் . இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் 184 இன்னிங்ஸ்களில் 8625 ரன்கள் எடுத்துள்ளார், அதில் அவர் 30 சதங்கள் மற்றும் 29 அரைசதங்களையும் அடித்துள்ளார். இதுதவிர்த்து 161 ஒருநாள் போட்டிகளில் 10 சதங்கள், 36 அரைசதங்களுடன் 7767 ரன்களையும், டி20 கிரிக்கெட்டில் 9 போட்டிகளில் 4 அரைசதங்களுடன் 308 ரன்களையும் சேர்த்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மேத்யூ ஹைடன் 21ஆம் நூற்றாண்டில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை உள்ளடக்கிய ஆல்டைம் சிறந்த லெவனைத் தேர்வு செய்துள்ளார். இதில் அவர் ஆஸ்திரேலியாவிலிருந்து ஐந்து வீரர்களையும், இங்கிலாந்து மற்றும் இந்தியாவிலிருந்து தலா இரண்டு வீரர்களையும், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளில் இருந்து தலா ஒரு வீரரையும் தேர்வுசெய்துள்ளார்.