இந்த இந்திய வீரரை நான் ஆஸி அணிக்காக தேர்வு செய்வேன் - மேத்யூ ஹைடன்!
தற்போதுள்ள இந்திய அணியில் ஜஸ்ப்ரீத் பும்ராவை தேர்வு செய்து ஆஸ்திரேலியாவுக்காக உலகக்கோப்பை தொடரில் விளையாட வைக்கலாம் என்று ஆஸி அணியின் ஜாம்பவான் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
-mdl.jpg)
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இத்தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு வரும் 30ஆம் தேதி ஆசிய கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்திய அணி தற்போது ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையில் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் 2 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் 2 ஆட்டத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.
Trending
இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடனிடம் தற்போதுள்ள இந்திய அணியில் இருந்து ஒரு வீரரை ஆஸ்திரேலியாவுக்காக தேர்வு செய்து வரும் உலகக்கோப்பையில் விளையாட வைக்கலாம் என்றால் யாரை தேர்வு செய்வீர்கள் என கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த மேத்யூ ஹைடன், “தற்போதுள்ள இந்திய அணியில் ஜஸ்ப்ரீத் பும்ராவை தேர்வு செய்து ஆஸ்திரேலியாவுக்காக உலகக்கோப்பை தொடரில் விளையாட வைக்கலாம்” என்றார். இந்திய அணிக்காக இதுவரை 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 121 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பியத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now