
ஐபிஎல் 16ஆவது சீசனில் இன்று நடைபெற்ற 32ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாசை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு டூ பிளெசிஸ் 62, மேக்ஸ்வெல் 77 ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்களை எடுத்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிரடி வீரர் ஜோஷ் பட்லர் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, இரண்டாவது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் மற்றும் படிக்கல் மிகச் சிறப்பாக விளையாடி 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, முறையே 47, 52 ரன்கள் எடுத்த தந்தாலும் அது வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் மூன்று பந்துகளில் அஸ்வின் 10 ரன்கள் எடுத்து நான்காவது பந்தில் ஆட்டம் இழக்க, பரபரப்பான இந்த போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹர்சல் படேல் சிறப்பாக பந்து வீசி 32 ரன்கள் தந்து நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றி வெற்றிக்கு இரண்டாவது பகுதியில் முக்கியக் காரணமாக இருந்தார்.