
இந்திய கிரிக்கெட் வீரரும், கர்நாடகா அணியின் கேப்டனுமாக செயல்பட்டு வருபவர் மயங்க் அகர்வால். இந்திய அணிக்காக இதுவரை 21 டெஸ்ட் போட்டிகளிலும், 5 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள மயங்க் அகர்வால் 4 சதம், 6 அரைசதங்களுடன் 1500 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியிலிருந்து கழட்டிவிடப்பட்ட மயங்க் அகர்வால் தற்போது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொரில் கர்நாடகா அணியை வழிநடத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று அவர் அகர்தலாவில் இருந்து சூரத்திற்கு விமானம் மூலம் பயணம் செய்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென வாய் மற்றும் தொண்டை பகுதியில் எரிச்சல் ஏற்பட்டதாகவும், இதனால் அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவர் தற்போது அபாயகரமான நிலையில் இருந்து மீண்டு விட்டதாகும், இருப்பினும் அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்கானித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Mayank Agarwal has reportedly been admitted to a hospital in Agartala after complaining of a burning sensation in his mouth and throat.#CricketTwitter #IndianCricket #TeamIndia #MayankAgarwal pic.twitter.com/YieoZqbzPT
— CRICKETNMORE (@cricketnmore) January 30, 2024