நான் இப்போது நன்றாக இருக்கிறேன் - மயங்க் அகர்வால்!
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய வீரர் மயங்க் அகர்வால், தற்போது நலமுடன் இருப்பதாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரரும், கர்நாடகா அணியின் கேப்டனுமாக செயல்பட்டு வருபவர் மயங்க் அகர்வால். இந்திய அணிக்காக இதுவரை 21 டெஸ்ட் போட்டிகளிலும், 5 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள மயங்க் அகர்வால் 4 சதம், 6 அரைசதங்களுடன் 1500 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியிலிருந்து கழட்டிவிடப்பட்ட மயங்க் அகர்வால் தற்போது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொரில் கர்நாடகா அணியை வழிநடத்தி வருகிறார்.
இந்நிலையில், நேற்றைய தினம் தன் அணியினருடன் அகர்தலாவில் இருந்து குஜராத் மாநிலம் சூரத் செல்ல விமானத்தில் பயணித்துள்ளார். அப்போது விமானத்தில் குடிநீர் கொண்டு வருமாறு கேட்க, அதனை குடித்த சிறிது நேரத்திலேயே அவருக்கு வாய் மற்றும் தொண்டை பகுதியில் எரிச்சல் ஏற்பட்டு, அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
Trending
இந்நிலையில் தற்போது அபாயகரமான நிலையில் இருந்து மீண்டு விட்ட மயங்க் அகர்வால் தனக்காக பிராத்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் சமூக வலைதளத்தை பதிவு ஒன்றையையும் பகிர்ந்துள்ளார். அதில், “நான் இப்போது நன்றாக இருக்கிறேன். எனது கம்பேக்கிற்காக நான் தற்போது தயாராகி வருகிறேன். குணமடைய வேண்டிக்கொண்ட அனைவருக்கும் நன்றி. உங்களது பிரார்த்தனைக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
I am feeling better now.
— Mayank Agarwal (@mayankcricket) January 31, 2024
Gearing to comeback
Thank you for prayers, love and support, everyone! pic.twitter.com/C0HVPPPGnK
இதையடுத்து அவர் நடப்பாண்டு ரஞ்சி கோப்பை தொடரில் ரயில்வே அணிக்கெதிரான போட்டியில் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள மயங்க் அகர்வால் 67.39 என்ற சராசரியில் 2 சதங்களுடன் 310 ரன்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now