
Mayank Agarwal To Join India Squad For England Test, After Rohit Sharma Tests COVID-19 Positive: Rep (Image Source: Google)
இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 1 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் ஜூலை 1 அன்று டெஸ்ட் தொடங்குகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் பர்மிங்ஹாம் டெஸ்டில் ரோஹித் சர்மா விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.
இதையடுத்து மாற்று ஏற்பாடாக 31 வயது மயங்க் அகர்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்காக 21 டெஸ்டுகள், 5 ஒருநாள் ஆட்டங்களில் அவர் விளையாடியுள்ளார். இன்று இங்கிலாந்துக்கு வரும் மயங்க் அகர்வால், புதிய விதிமுறைகளின்படி தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. காயம் காரணமாக கே.எல். ராகுலும் பர்மிங்ஹாம் டெஸ்டில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.