
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியானது 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ் இணை 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையிலும், இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்து தோல்வியைத் தழுவியது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த மயங்க் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய லக்னோ அணி கேப்டன் நிக்கோலஸ் பூரன், “இது எங்களுக்கு ஒரு அற்புதமான தொடக்கம். சொந்த ரசிகர்கள் முன்பு வெற்றிபெற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். இப்போட்டிக்கு முன்னதாக நாங்கள் பல ஆலோசனைகளில் ஈடுபட்டோம். அதில் நல்ல தொடக்கத்தை பெறுவது குறித்தும், சரியான பிளேயிங் லெவனை தேர்வு செய்வது குறித்தும் ஆலோசித்தோம். இந்த மைதானத்தில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்து நல்ல இலக்கை நிர்ணயித்தோம்.