Advertisement

இந்தியாவுக்கு எதிராக எங்கள் பேஸ்பால் அனுகுமுறை தொடரும் - பிராண்டன் மெக்கல்லம்!

சிறந்த அணியுடன் மோத வேண்டுமெனில் இந்தியாவை அந்த சொந்த மண்ணில் எதிர்கொள்வதுதான் சரியாக இருக்கும் என பிராண்டன் மெக்கல்லம் கூறியுள்ளார்.

Advertisement
இந்தியாவுக்கு எதிராக எங்கள் பேஸ்பால் அனுகுமுறை தொடரும் - பிராண்டன் மெக்கல்லம்!
இந்தியாவுக்கு எதிராக எங்கள் பேஸ்பால் அனுகுமுறை தொடரும் - பிராண்டன் மெக்கல்லம்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 04, 2023 • 07:52 PM

டெஸ்டில் தொடர் தோல்வியிலிருந்ததால் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து ஜோ ரூட் 2022இல் விலகினார். மெக்குல்லம் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு பென் ஸ்டோக்ஸ் கேப்டன் ஆனார்.  மெக்கல்லம் - பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி வருகிறது. இந்த அணுகுமுறைக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பேஸ்பால் என பெயர் வைத்துள்ளனர். 

Bharathi Kannan
By Bharathi Kannan
December 04, 2023 • 07:52 PM

அடுத்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது. இத்தொடர் வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி 25இல் முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. 

Trending

இது குறித்து பயிற்சியாளர் மெக்கல்லம், "இந்தியாவில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவது மிகப்பெரிய சவாலாக இருக்கும். சிறந்த அணியுடன் மோத வேண்டுமெனில் இந்தியாவை அந்த சொந்த மண்ணில் எதிர்கொள்வதுதான் சரியாக இருக்கும். இதில் வெற்றி பெற்றால் புகழப்படுவோம் இல்லையெனில் இகழப்படுவோம்.

எங்களது பேஸ்பால் அணுகுமுறையால் உடனடி பலன் கிடைத்துண்டு. ஆனால் இது எங்களுக்கு இன்னும் முழுமையானதாக அமையவில்லை. சில வீரர்கள் 18 மாதங்களாக அவர்களது முழுத்திறனை வெளிப்படுத்தாமல் இருக்கிறார்கள். தலைவரின் வேலை இதை சரி செய்வதுதான்" எனக் கூறியுள்ளார். 

நியூசிலாந்தை சேர்ந்த மெக்குல்லம் ஐபிஎல்லில் 73 பந்துகளில் 158 ரன்கள் அதிரடியாக அடித்து நொறுக்கினார். அதனால் பேஸ்பால் என்ற பட்டப்பெயர் இங்கிலாந்துக்கும் வந்தது. இவரது இந்த அணுகுமுறை இங்கிலாந்து கிரிக்கெட்டினையே மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement