
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் 22ஆம் தேதியும், ஒருநள் தொடரானது பிப்ரவரி 6ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இதனையடுத்து டி20 தொடருக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ஜனவரி 22 அன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான இத்தொடரானது சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தயாராவதற்கு ஒரு பயிற்சியாக அமையும் என இங்கிலாந்து அணி தலைமை பயிற்சியாளர் பிராண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "நாங்கள் உண்மையிலேயே பார்க்கக்கூடிய ஒரு கிரிக்கெட் பிராண்டை விளையாட வேண்டும் என்று நான் மிகவும் ஆவலாக உள்ளேன். எங்களிடம் உள்ள திறமையைக் கொண்டு, எங்களால் அதனை செய்ய முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை. ஏனெனில் எங்களிடம் அதிரடியான பேட்டர்கள், சிறப்பான சுழற்பந்து வீச்சாளர்கள், சிறந்த ஃபீல்டர்கள் மற்றும் அதிவேக பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.