ரிக்கி பாண்டிங், தோனியின் சாதனையை தகர்த்தார் மெக் லெனிங்!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு 5ஆவது ஐசிசி கோப்பையை வென்று கொடுத்து சாதனை படைத்துள்ளார் கேப்டன் மெக் லெனிங்.
தென் ஆப்பிரிக்காவில் நடந்த மகளிர் டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணி 6ஆவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய மகளிர் அணி, பெத் மூனியின் பொறுப்பான அரைசதத்தால் (74 ரன்கள்) 20 ஓவரில் 156 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 137 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 6ஆவது முறையாக டி20 உலக கோப்பையை வென்றது.
Trending
ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டன் மெக் லானிங்கின் கேப்டன்சியில் அந்த அணி ஹாட்ரிக் டி20 உலக கோப்பையை வென்றுள்ளது. மெக் லெனிங் 5ஆவது ஐசிசி கோப்பையை ஆஸ்திரேலிய அணிக்கு வென்று கொடுத்து சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டன் மெக் லானிங்கின் கேப்டன்சியில் முதல் முறையாக 2014இல் ஒருநாள் உலக கோப்பையை வென்றது. 2022ஆம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பையையும் மெக் லானிங் ஆஸ்திரேலிய அணிக்கு வென்று கொடுத்தார்.
அதுமட்டுமின்றி, 2018, 2020 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் டி20 உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணிக்கு தொடர்ச்சியாக 3ஆவது முறையாக டி20 உலக கோப்பையை வென்று கொடுத்துள்ளார் மெக் லானிங். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு மொத்தமாக 5 ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்து, ரிக்கி பாண்டிங் மற்றும் தோனியின் சாதனைகளை முறியடித்து, அதிக ஐசிசி கோப்பையை வென்ற கேப்டன் என்ற சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now