
வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முந்தினம் (ஏப்ரல் 28) சிட்டாகாங்கில் உள்ள ஜாஹூர் அகமது சவுத்ரி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி நிக் வெல்ச் 54 ரன்களையும், சீன் வில்லியம்ஸ் 67 ரன்களையும், பிரையன் பென்னட், பென் கரண் ஆகியோர் தலா 21 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்காளுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழ்னதனர். இதனால் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 277 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய தைஜுல் இஸ்லாம் 6 விக்கெட்டுகளையும், நயீம் ஹசன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணிக்கு சாத்மான் இஸ்லாம் - அனமுல் ஹக் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் அனமுல் ஹக் 39 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மொமினுல் ஹக் 33 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷாத்மான் இஸ்லாம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 2ஆவது சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார்.