-mdl.jpg)
நியூசிலாந்து அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து அசத்தியதுடன், தொடரையும் வென்றது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒவ்வொரு மாதமும் சிறந்து விளங்கும் கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கி வருவது வழக்கம். அந்தவகையில் கடந்த செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான பரிந்துரைப் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அந்த வகையில் வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலில் ஆஸ்திரேலியவின் வீரர் டிராவிஸ் ஹெட், இலங்கை வீரர்கள் கமிந்து மெண்டிஸ், பிரபாத் ஜெய சூரியா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தனது.
இதில் நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்து அடுத்தடுத்து சதங்களை விளாசித் தள்ளிய கமிந்து மெண்டிஸ், செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்று சாதித்துள்ளார். அந்தவகையில் செப்டம்பர் மாதத்தில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கமிந்து மெண்டிஸ், 90.20 என்ற சராசரியில் 451 ரன்களை குவித்தார். மேற்கொண்டு வெறும் 8 டெஸ்டில், 13 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்த டான் பிராட்மேனின் சாதனையை சமன் செய்தார். இந்தாண்டு கமிந்து மெண்டிஸ் வெல்லும் இரண்டாவது விருது இதுவாகும்.